திருவெண்ணெய்நல்லூர் பகுதி, விழுப்புரம் தாலுகா பகுதி, விழுப்புரம் நகரம்
வளவனூர் திருநாவலூர் காவல் நிலைய சுற்று வட்டாரா பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை
திருடிய கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம் குச்சிப்பாளையம் சிவா என்கிற
நல்லசிவம், மேல்காவனூர் அருண், வாணியம்பாளையம் முத்துக்குமரன் ஆகிய மூவரையும்
திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் சப்-இன்ஸ்பெக்டர்கள்
பாலசிங்கம், மணிகண்டன் மற்றும் போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து 27 மோட்டார்
சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் தொடர்
திருட்டு சம்பவம் நடைபெற்று வந்ததால் இன்ஸ்பெக்டர் சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும்
போலீசாரின் தொடர் முயற்சி காரணமாக 3 திருடர்களை கைது செய்து 27 வாகனங்களை பறிமுதல்
செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்
உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.