கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம்
மேற்கு மற்றும் தெற்கு ஒன்றியங்களில் உள்ள 15 ஊராட்சிகளுக்கு தவெக கழக நிர்வாகிகளுக்கு
முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அனைவருக்கும் முதலமைச்சர் புகைப்படத்தை
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட இணை செயலாளர் எஸ்.சரண்
ஆகியோர் வழங்கினர்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம்
தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் மேற்கு மற்றும் தெற்கு ஒன்றியங்களில் உள்ள 15 ஊராட்சிகளுக்கு
தவெக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் புகைப்படத்தை
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் மற்றும் தவெக மாவட்ட இணை செயலாளர்
எஸ்.சரண் ஆகியோர் வழங்கினர். அப்போது அவர்கள் பேசியதாவது,
நமது முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை
நாம் அனைவரும் அனைத்து ஒன்றியங்கள் மற்றும் ஊராட்சிகளிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில்
நலத்திட்ட உதவிகளுடன் சிறப்பான முறையில் கொண்டாட வேண்டும். அதேபோல் பள்ளி மாணவர்களுக்கும்,
பொது மக்களுக்கும் தேவைப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து தமிழக வெற்றி கழகம் கழகத் தலைவர் ஜோசப் விஜய் பிறந்தநாளை
வெகு விமர்சையாக கொண்டாட வேண்டும் என்று ஊரக வளர்ச்சி ஊராட்சித் துறை அமைச்சரும் கழகப்
பொதுச் செயலாளருமான என்ஆனந்த் தெரிவித்துள்ளார். அதன்படி நாம் அனைவரும் ஒன்றிணைந்து
சிறப்பான முறையில் தொகுதி முழுவதும் தொடர்ந்து கொண்டாட வேண்டும் என்று கலசபாக்கம் முன்னாள்
சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் மற்றும் தவெக மாவட்ட இணை செயலாளர் எஸ்.சரண்
ஆகியோர் கூறினர்.
நிகழ்ச்சியில் கலசபாக்கம் வடக்கு
ஒன்றிய இணைச் செயலாளர் மந்திரி கிருஷ்ணன் ஒன்றிய துணை செயலாளர்கள் விஜய், கோகுல்ராஜ்,
வினோத்குமார், ஒன்றிய பொருளாளர் செல்வம், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் நித்திஷ்,
கோகுல், கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய இணைச் செயலாளர் தமிழரசன், ஒன்றிய மாணவரணி செயலாளர்கள்
தமிழ், மோகன், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் ராஜா, ஊராட்சி செயலாளர் பொன்மணி, தவெக
கழக நிர்வாகிகள் விமல்குமார் விஜய் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.