ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த இச்சிபுத்தூரில் எம்ஆர்எப் டயர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ஆண்டுதோறும் தொழிலாளர்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம்
அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு மார்ச் மாதமும் பாதுகாப்பு மாதமாக
அரக்கோணம் எம் ஆர் எஃப் நிறுவனம் கடைப்பிடித்து வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு தேசிய பாதுகாப்பு மாதம் அனுசரிக்கப்பட்டு அதன் நிறைவு விழா
நடைபெற்றது.
அரக்கோணம்
எம்ஆர்எப் நிறுவனத்தின் பொது மேலாளர் ஜான் டேனியல் தலைமை வகித்தார்.
பாதுகாப்பு மேலாளர் தினகரன் தாமஸ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக
வேலூர் மாவட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர் தங்கதுரை
கலந்து கொண்டு பேசினார். அதைத்தொடர்ந்து பாதுகாப்பு மாதத்தில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு
பரிசுகளை வழங்கினார்.
விழாவில்
அரக்கோணம் எம் ஆர் எஃப் நிறுவனத்தின் மூத்த உற்பத்தி மேலாளர் இக்னேஷியஸ் ஜார்ஜ்,
மூத்த பாதுகாப்பு மேலாளர் கணேசன் பேசினர்.
விழாவில்
பொறியியல் துணைப் பொது மேலாளர் எல்வின், கணக்கியல் துணை பொதுமேலாளர் கணபதி, மூத்த மனிதவள மேலாளர் திலீப் குமார், தலைமை
பாதுகாப்பு அலுவலர் பிரசாத் பிள்ளை, அனைத்து துறை தலைவர்கள் பாதுகாப்பு மேலாளர் தினகரன் தாமஸ், துணை
பாதுகாப்பு மேலாளர் நந்தபிரகாஷ் ஆகியோர் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
விழாவில்
தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிலாளர்கள், பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தொழிலாளர் நலச் சங்க தலைவர் முரளி, பொது மேலாளர் சுரேஷ் நன்றி தெரிவித்தனர்.