வேலூரில் 70 ஆயிரம் முதல் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தாமரை மலரும்!

Published: 17/05/2024 12:55 PM Updated: 17/05/2024 12:55 PM
Ads
news-banner

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையானது வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் வருகிற ஜூன் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. கல்லூரியில் வாக்குப்பதிவு  இயந்திரங்கள் பத்திரமாக வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் வேலூர் பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டார்.

 

பின்னர் ஏ.சி.சண்முகம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் சிறப்பான முறையில் பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளார். வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் முன்பு பலத்த போலீஸ் மற்றும் ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எளிதாக யாரும் உள்ளே போய்விட முடியாது.

 

வேலூரில் வெங்கட்நாராயணா கோவில் 5 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. முதல் தவணையாக 60 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளோம். சென்னையில் உள்ள வெங்கட நாராயணன் கோவில் திருப்பணிக்கு ரூபாய் 1 கோடி கொடுத்துள்ளோம். தேர்தலுக்குப் பிறகு பூமி பூஜைகள் செய்யப்பட்டு பணிகள் துவங்கும் என்றார்.

 

தோல்வி பயத்தில் பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் உளறுகிறார் என்று கதிர் ஆனந்த் கூறியுள்ளார் என கேட்டதற்கு,"வருகிற 4ம் தேதி நண்பகல் 12 மணிக்கு தெரியும். ஆகவே பாஜகவின்  தாமரை சின்னம் வேலூரில் 75 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்,"என்றார்.