முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி பிறந்தநாள் விழா:

Published: 18/05/2024 14:58 PM Updated: 18/05/2024 14:58 PM
Ads
news-banner

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருள்மிகு வேதபுரீஸ்வரர் கோயிலில் முன்னாள் முதல்வரும், தமிழ்நாடு சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி பிறந்தநாள் விழா முன்னிட்டு முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான முக்கூர் சுப்பிரமணி வெள்ளி தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

 

மாவட்ட செயலாளர் தூசி மோகன், மாவட்ட இணை செயலாளர் விமலா மகேந்திரன், நகர செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான வெங்கடேசன், அவைத்தலைவர் ஜனார்த்தனம், ஒன்றிய செயலாளர்கள் மகேந்திரன், துரை, ரங்கநாதன், மாவட்ட நிர்வாகிகள் அருணகிரி, கோபால், ரவிச்சந்திரன், மற்றும் அருளானந்தம், கோவிந்தராஜ், எழில், சுரேஷ், தணிகாசலம், வழக்கறிஞர்கள் மெய்யப்பன், முனுசாமி, தசரதன், அருண், அரவிந்த், பெருமாள், நரசிம்மன், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

 

பின்னர் நிகழ்வில் பங்கேற்ற பொதுமக்களுக்கு மரக்கன்றுகளுடன், அன்னதானம் வழங்கப்பட்டது.