செஞ்சி ஒன்றியம் ரெட்டிபாளையத்தில் ரூ 64 மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் திட்டம்

Published: 22/09/2024 14:53 PM Updated: 22/09/2024 14:53 PM
Ads
news-banner

செஞ்சி ஒன்றியம் ரெட்டிபாளையத்தில் ரூ 63.71 மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைப்பிற்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் ஆலம்பூண்டி ஊராட்சி ரெட்டிபாளையம் முதல் மல்லாண்டி செல்லும் சாலையை தமிழ்நாடு முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 63.71லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை விழா நேற்று காலையில் திக்காமேடு கெங்கையம்மன்கோவில் அருகில் நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் கேமல் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் முத்தம்மாள் சேகர் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு 63.71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.


நிகழ்ச்சியில் ஒன்றிய துணை சேர்மன் ஜெயபாலன், ஒன்றிய செயலாளர்கள் விஜயராகவன், பச்சையப்பன், ஊராட்சி ஒன்றிய பொறியாளர் அருண்பிரசாத், பணி மேற்பார்வையாளர் அருணாச்சலம், ஒன்றிய நிர்வாகிகள் வாசு, அய்யாதுரை, சிவப்பிரகாசம்,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பழனி,ஆலபூண்டி ஊராட்சி நிர்வாகிகள் சங்கர், சிவராமன், சந்திரசேகரன், ரமேஷ், அண்ணாமலை, குருவன் ரெட்டியார், ராஜேந்திரன் தாமோதரன், விஜயன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.