செய்யாறில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்: எம் எல் ஏ ஒ.ஜோதி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்

Published: 29/09/2024 13:59 PM Updated: 29/09/2024 13:59 PM
Ads
news-banner

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன் அண்ணா சிலை சந்திப்பு அருகில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவி ஏற்றத்தைத் தொடர்ந்து திமுகவினர் எம்எல்ஏ .ஜோதி தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.


பின்னர் எம்எல்ஏ .ஜோதி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் லோகநாதன், நகர செயலாளர் விஸ்வநாதன், நகர மன்ற தலைவர் மோகனவேல், அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், ஒன்றிய செயலாளர்கள் ஞானவேல், ரவிக்குமார், நகரமன்ற உறுப்பினர்கள் கங்காதரன், கோவேந்தன், விவசாய உற்பத்தி குழு உறுப்பினர் சிவக்குமார், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


செய்யாறு டவுன் அண்ணா சிலை சந்திப்பதில் நேற்று மாலை உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவி ஏற்றதை கொண்டாடும் வகையில் எம் எல் .ஜோதி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.