திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பஜார் வீதியில் உள்ள முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதற்கு பொதுமக்களுக்கு பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ இனிப்புகளை வழங்கி பேசியதாவது, நமது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தபோது பல்வேறு துறைகளில் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்தார். அதேபோல் இளைஞர்கள் விளையாட்டில் அதிக அளவு ஆர்வம் உள்ளார்கள் அவர்களை விளையாட்டில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் அதற்காக விளையாட்டு துறை மூலம் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை பங்கேற்றி தொடங்கி வைத்தார். விளையாட்டு போட்டிகளில் சாதிக்கவும் வைத்தார்.
இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை மூலம் மகளிர் உரிமைத்தொகை ஏழை எளிய மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ 1000 வழங்கியுள்ளார். அதில் விடுபட்ட பயனாளிகளுக்கும் படிப்படியாக வழங்கி வருகிறார். அது மட்டும் இல்லாமல் பெண் பிள்ளைகள் உயர்கல்வி படிப்பதற்கும் ஆண் பிள்ளைகள் உயர் கல்வி படிப்பதற்கும் மாதந்தோறும் ரூ 1000 வழங்கி வருகிறார். எத்தனை திட்டங்களும் படிக்கும் மாணவர்களுக்காகவும் பொது மக்களுக்காகவும் மகளிர் காகவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்தபோது வழங்கி வந்தார்.
இப்போது துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின், பொறுப்பேற்று பல்வேறு துறை நல திட்ட உதவிகளும் வேலை வாய்ப்புகளும் எண்ணற்ற சலுகைகளும் தமிழக மக்களுக்காக வழங்க உள்ளார் மற்றும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்களும் சலுகைகளும் வழங்க உள்ளார் என்று பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ இவ்வாறு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கூறினார்.