சலவை தொழிலாளியுடன் சேர்ந்து துணிகளை அயன் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளர் மலையரசன்

Published: 30/03/2024 14:19 PM Updated: 30/03/2024 14:19 PM
Ads
news-banner

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி நாடாளுமன்ற பொது தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மலையரசன் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் உள்ள பேருந்து நிலையம்,புக்குளம் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்தவெளி வேனில் நின்றவாறு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 

தொடர்ந்து புக்குளம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள அயன் கடையில் சலவை தொழிலாளியுடன் சேர்ந்து துணிகளை அயன் செய்து திமுகவின் வெற்றி சின்னமான உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தியாகதுருகம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திமுக வேட்பாளருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும் மேளதாளங்கள் முழங்கவும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 

இந்த பிரச்சாரத்தின் போது திமுகவின் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தை கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.