செய்யாறுஅருகே பையூரில் பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவம்

Published: 02/04/2024 10:23 AM Updated: 02/04/2024 10:23 AM
Ads
news-banner

செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றியம் பையூரில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் ,செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றியம் பையூரில் பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது .இக்கோயிலில் திருக்கல்யாண உற்சவ வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

 

மரகதவல்லி, அமிர்தவல்லி சமேத வெங்கடேச பெருமாள் ஆகியோருக்கு திருக்கல்யாண உற்சவ வைபவத்தை வைணவ ஆச்சாரியார்கள் பக்தர்கள் முன்னிலையில் நடத்தினர். நிகழ்வில் உற்சவர்கள் ஒய்யாளி என்று அழைக்கப்படும் ஊஞ்சலாடும் நிகழ்வும் ,திருவீதி உலா நிகழ்வும் ,தொடர்ச்சியாக நடைபெற்றது .

 

பின்னர் தேங்காய்கள் உருட்டும் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து அந்த தேங்காய்களை ஏலவிடும் நிகழ்வும் விமர்சையாக நடைபெற்றது.

 

சென்னை உள்ளிட்ட இடங்களில் 30க்கும் மேற்பட்ட வைணவ ஆச்சாரியார்கள் கலந்து கொண்டு பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்துகொண்டு சிறப்பு அபிஷேகமும்,ஆராதனை வழிபாடுகளையும் நடத்தினர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.