கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி

Published: 08/04/2024 10:07 AM Updated: 08/04/2024 10:07 AM
Ads
news-banner

கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன் நேரில் ஆய்வு செய்தார்.


தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் அடங்கிய கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி வகுப்பு நேற்று முன்தினம் கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.


பயிற்சி வகுப்பினை திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியரும் தெ.பாஸ்கரபாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். மேலும் பள்ளியில் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதியில் அஞ்சல் வாக்கு செலுத்தும் மையத்தையும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


ஆய்வின்போது கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார், தாசில்தார் சரளா ஆகியோரும் உடனிருந்தனர்.