வேலூர் நாடாளுமன்ற தொகுதி சுயேச்சை வேட்பாளர் நடிகர் மன்சூர் அலிகான்

Published: 08/04/2024 14:47 PM Updated: 08/04/2024 14:47 PM
Ads
news-banner

இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவரும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி சுயேச்சை வேட்பாளருமான நடிகர் மன்சூர் அலிகான் காரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லும் பணம் மற்றும் அன்பளிப்பு பொருட்கள் உள்ளிட்டவை யாராவது கொண்டு செல்கிறார்களா என தொடர்ந்து சோதனை ஈடுபட்டு வருகின்றனர்

 

இந்த நிலையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் மன்சூர் அலிகான் அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்திலிருந்து நேற்று காலை டோல்கேட் உழவர் சந்தைக்கு வாக்கு சேகரிக்க சுழற்சி வேட்பாளர்  மன்சூர் அலிகான் காரில் வந்தபோது தேர்தல் பறக்கும் படையினர் காரை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் மேற்கொண்ட சோதனையில் பணம் பரிசுப் பொருட்கள் ஏதும் கைப்பற்றப் படவில்லை மேலும் இது வழக்கமான சோதனை தான் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

 

வேட்பாளரின் காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.