துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள
நாயுடுமங்கலம் பகுதியில் திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து
பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி சட்டப்பேரவை துணை சபாநாயகர்
கு.பிச்சாண்டி, உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம்
துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள கமலபுத்தூர் முதல் தேவனாம்பட்டு வரை உள்ள
ஊராட்சிகளில் கமலாபுத்தூர், நாயுடுமங்கலம், வடகருங்காலிப்பட்டி, மருத்துவம்பாடி,
காரியந்தல், வடபுழுதூர், நார்த்தாம்பூண்டி, முத்தரசம்பூண்டி, சிறுகிளாம்பாடி,
மேப்பத்துரை, கீழாத்தூர், பெரியகிளம்பாடி, ஊதிரம்பூண்டி, தேவனாம்பட்டு, ஆகிய
ஊராட்சிகளில் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட
ஊராட்சி குழு துணை தலைவர் பாரதி ராமஜெயம், தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய
செயலாளர்கள் பா.ராமஜெயம், வி.பி.அண்ணாமலை, ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை
ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் பாலு,
அனைவரையும் வரவேற்றார்.
பிரச்சாரத்தில் பேசிய துணை
சபாநாயகர் கு.பிச்சாண்டி, கடந்த 10 ஆண்டு பிஜேபி ஆட்சியில் விலைவாசிகள் அனைத்தும் ராக்கெட்
நோக்கி உயர்ந்துள்ளது. மக்கள் விலைவாசி உயர்வால் அடிப்படை வசதி பொருட்கள்
அனைத்தும் வாங்க முடியாத நிலையில் உயர்ந்து உள்ளது. இதை அனைத்தும் போக்க வேண்டும்
விலைவாசியை குறைக்க வேண்டும் என்றால் பிஜேபி அரசை விரட்டியடித்து இந்திய
கூட்டணியான காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் அதற்கு நாம் எல்லாம் இந்திய கூட்டணியான
நமது திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரைக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில்
வெற்றி பெற வைக்க வேண்டும் மேலும் திமுக ஆட்சியில் பல நல திட்ட உதவிகள் மக்களை
தேடி செல்கிறது பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம், பெண்கள் உயர் கல்வி
படிப்பதற்கு புதுமைப் பெண் திட்டத்தில் மாதந்தோறும் ரூ 1000, குடும்ப தலைவிகளுக்கு
கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ 1000, இதுபோன்ற
எண்ணற்ற திட்டங்கள் பொதுமக்களுக்காகவும் குறிப்பாக பெண்களுக்காகவும் பல சலுகைகளும்
பல திட்டங்களும் உடனுக்குடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி வருகிறார்
என்றும், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில்
வாக்களிக்கவேண்டும் என்று துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கேட்டுக்ககொண்டார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய
கவுன்சிலர்கள் மங்கலம் பிரபாகரன், சிவராமன், சத்யா பழனி, மாவட்ட விளையாட்டு
மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் தவக்குமார், இளைஞர் அணி அமைப்பாளர் வினோத்குமார்,
மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடன்
இருந்தனர்.