கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற
தொகுதியில் அரசியல் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சி நிர்வாகிகள்
மற்றும் தொண்டர்கள் இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும்
நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கள்ளக்குறிச்சி
சாமியார் மடம் பகுதியில் இருந்து கள்ளக்குறிச்சி துருகம் சாலை, கள்ளக்குறிச்சி
சேலம் சாலை, கவரை தெரு, கச்சிராயபாளையம் சாலை,
கோட்டைமேடு, கருணாபுரம், மந்தைவெளி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் மலையரசனுக்கு ஆதரவாக
உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு கோஷங்களை எழுப்பியவாறு இருசக்கர வாகன
பேரணியில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ்
கமிட்டி சார்பில் திமுக வேட்பாளர் மலையரசனை ஆதரித்து நடைபெற்ற இருசக்கர வாகன
பேரணியில் 15-வது வார்டு நகர கவுன்சிலர் தேவராஜ், கள்ளக்குறிச்சி நகர காங்கிரஸ்
கமிட்டி தலைவர் கே.என்.ஆர்.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனார். இந்த இருசக்கர
வாகன பேரணியை கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜெய் கணேஷ்
கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த இருசக்கர வாகன பேரணியில்
கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட பொறுப்பாளர் ஜெயச்சந்திரன், முன்னாள் மாவட்ட தலைவர்கள் தனபால், இளையராஜா மற்றும்
கள்ளக்குறிச்சி மாவட்டத் துணைத் தலைவர் இதயத்துல்லா, வீரமுத்து மற்றும் வட்டார
தலைவர்கள் சரண்ராஜ், கிருபாகரன், முனியப்பன், அசோக், தனபால், கள்ளக்குறிச்சி
இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் மாதேஸ்வரன், மாநில மாணவர் காங்கிரஸ் நிர்வாகி
ஆதில் கான் கள்ளக்குறிச்சி மாவட்ட பொருளாளர் எல்ஐசி ஆறுமுகம் காங்கிரஸ் கட்சியைச்
சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு திமுக வேட்பாளர் மலையரசனுக்கு ஆதரவாக
தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.