கள்ளக்குறிச்சி
நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 79.18 % சதவீத வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குப்பதிவு
இயந்திரங்கள் அனைத்தும் அந்தந்த வாக்குசாவடி மையங்களில் இருந்து போலீஸ்
பாதுகாப்புடன் சின்னசேலம் அருகே உள்ள வாசுதேவனூர் பகுதியில் அமைந்துள்ள மகாபாரதி
பொறியியல் கல்லூரியில் வருகின்ற ஜூன் 4-ஆம் தேதி எண்ணப்படுகிறது.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற
தொகுதிக்குட்பட்ட ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, ஆத்தூர், ஏற்காடு
மற்றும் கெங்கவல்லி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு என தனித்தனியாக வாக்கு எண்ணும்
மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தொகுதிக்குட்பட்ட 1803 வாக்குச்சாவடி மையங்களில்
இருந்து பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் துப்பாக்கி ஏந்தி பலத்த போலீஸ்
பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை
கொண்டுவரப்பட்டது. வாக்கு என்னும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் ரூமில்
பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி
மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஷ்ரவன்குமார் மற்றும்
தேர்தல் பொது பார்வையாளர் அசோக்குமார் கார்கே மற்றும் வேட்பாளர்கள் அனைத்து கட்சி
பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங்
ரூம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
மேலும் வாக்கு என்னும் மையத்தில்
3 நிலை பாதுகாப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் முதல் நிலையில் மத்திய
பாதுகாப்பு படையினரும், இரண்டாம் நிலையில் காவலர்களும், மூன்றாம் நிலையில்
கண்காணிப்பு கேமராக்களை பார்வையிடும் வகையிலும் 24 மணி நேரமும் தொடர்ந்து
கண்காணிக்கும் வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் வாக்கு
எண்ணிக்கை மையத்தின் அனைத்து பகுதிகளும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் தொடர்ந்து அவ்வபோது பாதுகாப்பு பணிகள் குறித்து நேரடி ஆய்வுகளும் நடத்தப்பட
உள்ளதாக மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஷ்ரவன்குமார்
தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வின் போது மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் சமய் சிங் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் உள்ளிட்ட
அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.