பாசிசத்திற்கும் ஜனநாயகத்திற்கும் நடக்கும் இந்த போரில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்

Published: 07/03/2024 04:19 AM Updated: 28/03/2024 12:34 PM
Ads
news-banner

விழுப்புரம் வடக்கு மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட மைலம் சட்டமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் மயிலம் ஒன்றியம் தீவனூரில் நடைபெற்றது.

 

விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்

 

பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் தரணி வேந்தனை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரையாற்றினார்.

 

கூட்டத்தில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-

 

திராவிட இயக்கம் தோன்றியதற்கு முக்கிய காரணம் தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் எல்லாம் படிக்க வேண்டும், பெண்கள் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் வர வேண்டும். முதன்முதலில் தமிழ்நாட்டில் பெண்கள் எல்லாம் உள்ளாட்சியில் பங்கு பெற வேண்டும். என்ற நடைமுறையை கொண்டு வந்த இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம்.

 

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும். என்பதுதான் சமூக நீதி ஆட்சி என்றும் இந்த ஆட்சி சமூக நீதி ஆட்சி திராவிட மாடல் ஆட்சி என்று தமிழ்நாடு முதலமைச்சர் பிரகடனம் படுத்தியுள்ளார்.

 

 

அந்த வகையில் கடந்த மூன்று ஆண்டுகால ஆட்சியில் முதலமைச்சர் இரவு பகல் பாராமல் கண் தூங்காமல் ஆட்சி நடத்துகிறார்.

 

புதுமைப்பெண் திட்டம்  விடியல் பயணத் திட்டம், இல்லம் தோறும் கல்வி திட்டம்,மக்களை தேடி மருத்துவம் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் என பல எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தாலும் இன்னுயிர் காக்கும் நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் உயிர்களை தமிழ்நாட்டின் முதலமைச்சர் காப்பாற்றியுள்ளதாகம் இந்தியாவில் எந்த ஒரு முதலமைச்சரும் இது போன்ற ஒரு திட்டத்தை செயல்படுத்தி உள்ளாரா என்றால் கிடையாது என அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.

 

தொடர்ந்து பேசிய அமைச்சர் எ.வ. வேலு மத்தியில் விவசாய சட்டத்திற்கும் சி.சி.ஏ சட்டத்திற்கும் பாஜக அரசுடன் அதிமுகவினர் கூட்டு சேர்ந்து இச்சட்டத்திற்கு ஆதரவாக 11 அதிமுகவினர் ஓட்டு போட்டதால் சட்டத்தை கொண்டு வந்துள்ளனர்.

 

பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிச்சாமி கூட்டு சேர்த்து தமிழ்நாட்டை கடந்த 10 ஆண்டு காலமாக வஞ்சித்து உள்ளனர் என கடுமையாக குற்றம் சாட்டினார். பாசிசதற்கும் ஜனநாயகத்திற்கும் நடக்கும் இந்த போரில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும் எனவும்

 

10 ஆண்டுகால  பி.ஜே.பி.ஆட்சியில் பிரதமர் மோடி இதுவரைக்கும் வெறும்  ட்ரைலர் என்கிறார். அறுபது ரூபாய் விற்கும் அரிசி 180 ரூபாய்க்கும், ₹400 விற்ற சமையல் எரிவாயு இப்போது ₹90க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  அடுத்து பாஜக ஆட்சிக்கு வந்தால் அது 3 மடங்கு உயர்ந்துவிடும். மாநில அரசு கட்டுப்பாட்டில் வாட் வரி இருந்ததால் விலைவாசி குறைவாக இருந்தது. விலையேற்றத்திற்கு ஜி.எஸ்.டி தான் காரணம் என விமர்சனம் செய்த அமைச்சர் எ.வ.வேலு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முதலமைச்சர் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்கள் புதுவை உட்பட தமிழ்நாட்டில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று முதலமைச்சரையார் கைகாட்டுகிறாரோ அவர் பிரதமராக பதிவி ஏற்பது உறுதியென அமைச்சர் எ.வ.வேலு உறுதிபட தெரிவித்தார்.

 

கூட்டத்துக்கு வருகை தந்த அமைச்சர் எ.வ.வேலுவை அமைச்சர் செஞ்சிமஸ்தான், மயிலம் ஒன்றிய பெருந்தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் ஆகியோர் பூ செண்டு வழங்கி வரவேற்றனர். முன்னதாத ஆரணி தொகுதி வேட்பாளர் தரணிவேந்தன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டாக்டர்.மாசிலாமணி, ராமமூர்த்தி,மயிலம் தொகுதி தலைமை திமுக பொறுப்பாளர் ஜெரால்டு, தலைமை தீர்மானம் உறுப்பினர் செஞ்சி. சிவா, மயிலம் ஒன்றிய பெருந்தலைவர் யோகேஸ்வரி மணிமாறன், செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான், வல்லம் ஒன்றிய பெருந்தலைவர் அமுதா ரவிக்குமார், ஒன்றிய செயலாளர்கள் மணிமாறன்,செழியன், இளம்சுருதி, துரை, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சம்சுதீன், ராஜ்பரத், உள்ளிட்ட தோழமைக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.