சேத்துப்பட்டு அருணகிரிநாதர் சிவாலயத்தில் பிரதோஷ விழா

Published: 21/04/2024 14:27 PM Updated: 21/04/2024 14:32 PM
Ads
news-banner

சேத்துப்பட்டு அருணகிரிநாதர் சிவாலயத்தில் நடைபெற்ற சித்திரை மாதவளர்பிறை  பிரதோஷ விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

சேத்துப்பட்டு ஆரணி சாலையில் உள்ள அருணகிரிநாதரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெறும் அருணகிரிநாதர் சிவாலயத்தில் சித்திரைமாத  வளர்பிறை  பிரதோஷம் முன்னிட்டு அருணகிரிநாதர், நந்திதேவர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதனை தொடர்ந்து  அலங்கார ரூபத்தில் அருணகிரிநாதர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சேத்துப்பட்டு பழம்பேட்டை உள்பட பல்வேறு பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

இதேபோன்று பழம் பேட்டை காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் சிவாலயத்திலும், பாலாம்பிகை சமேத பசுபதி ஈஸ்வரர் சிவாலயத்திலும், அண்ணா தெருவில் உள்ள கற்பகாம்பிகை சமேத காரணீஸ்வரர் சிவாலயத்திலும் நெடுங்குணம் பாலாம்பிகை சமேத தீர்க்காஜலஈஸ்வரர் சிவாலயத்திலும் நடைபெற்ற பிரதோஷ விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபராயணம் செய்து சாமி தரிசனம் செய்தனர்.