அரக்கோணத்தில் மகாவீர் ஜெயந்தியை
முன்னிட்டு ஜெயின் சங்கம் சார்பில் சமபந்தி போஜனம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
பகவான் மகாவீரரின் 2623வது பிறந்த
நாளை முன்னிட்டு மகாவீர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம்
பகவான் மகாவீர் தெருவில் ஜெயின் சங்கம் சார்பில் சமபந்தி போஜனம் நிகழ்ச்சி
நடைபெற்றது.
முன்னதாக மகாவீர் படத்திற்கு
ஜெயின் சங்கத்தைச் சேர்ந்த கியான்சந்த் கேலடா, பிரகாஷ்சந்த் தாரிவால், ஜவுரிலால் கட்டாரியா, தான்மல் குலேச்சா, கிஷோர் கோத்தாரி, பாரஸ்மல் மூத்தா, பிரசன்சந்த் சக்லேச்சா, சுசீல் கட்டாரியா, ஜெய்சந்த் கட்டாரியா, பதம்சந்த் சக்லேச்சா ஆகியோர்
தீபாராதனை செய்து வழிபாடு செய்தனர்.
அதைத்தொடர்ந்து ஜெயின்
சங்கத்தினர் சமபந்தி போஜனம் நிகழ்ச்சியில் ஏழை எளிய மக்களுக்கு அறுசுவை உணவு
வழங்கினர்.
சமபந்தி போஜனம் நிகழ்ச்சியில்
2000க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அறுசுவை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அரக்கோணம் ஜெயின்
சங்கத்தினர் செய்திருந்தனர்.