விழுப்புரம் நகரத்தில் உள்ள
கிழக்கு பாண்டி ரோடு நகர திமுக அலுவலகம் 4 முனை சந்திப்பு புதிய பேருந்து நிலையம்,
பழைய பேருந்து நிலையம், விழுப்புரம் எம்எல்ஏ அலுவலகம் உள்ளிட்ட 10-க்கு மேற்பட்ட
இடங்களில் நேற்று திமுக சார்பில் தண்ணீர் பந்தல் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி
திறந்து வைத்தார்.
இதில் அமைச்சர் பொன்முடி பொதுமக்களுக்கு மோர், இளநீர்
தர்பூசணி கூல்ட்ரிங்ஸ் கூழ் உள்ளிட்ட வழங்கினார். இந்நிகழ்ச்சியில் விழுப்புரம்
சட்டமன்ற உறுப்பினர் இலட்சுமணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன்,
மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, நகர செயலாளர் சக்கரை மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆவின்
தினகரன் மாவட்ட மாணவரணி செயலாளர் ஸ்ரீ வினோத், திமுக நிர்வாக முன்னேற்ற சங்கம்
பொதுச் செயலாளர் வாலிபால் மணி, திமுக வர்த்தக அணி அமைப்பாளர் கோல்ட் வெங்கடேஷ் நகர
மன்ற உறுப்பினர்கள் மணவாளவன், அமிர்தராஜ், வசந்தா
அன்பரசு, மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் .