மாணவர்களால் முடியாதது ஒன்றும்
இல்லை முடியும் என நினைத்து படித்தால் வெற்றி பெறலாம் என 10 ஆம் வகுப்பு
பொதுத்தேர்வில் தமிழகத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி சந்தியா பேட்டி.
10 ஆம் வகுப்பு பொது தேர்வு
முடிவில் தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள ஜெயம் வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த
மாணவி சந்தியா 499 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த 10 ஆம்
வகுப்பு பொது தேர்வின் முடிவு நேற்று வெளியாகிறது. மாணவ, மாணவிகள் தங்களின்
மதிப்பெண்களை வரவேற்று காத்திருந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள
ஜெயம் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி சந்தியா 499 மதிப்பெண் பெற்று
தமிழகத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
முதலிடம் பிடித்த மாணவி
சந்தியாவிற்கு ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர் மாணவிகள் பாராட்டு தெரிவித்து
வருகின்றனர்.
தான் வருங்காலத்தில் ஒரு
வழக்கறிஞராக ஆக வேண்டுமென தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் இதே
பள்ளியில் தன்னுடைய சகோதரி 12-ஆம் வகுப்பில் முதலிடம் பெற்றுள்ளது தனக்கு மிகவும்
சந்தோஷத்தை அளிப்பதாகவும் மாணவ மாணவிகள் மென்மேலும் படித்து தன்னை போல்
மதிப்பெண்களை பெற்று சாதனை படைக்க வேண்டும், மாணவ மாணவிகள் முடியும் என நினைத்து
படிக்க வேண்டும் நம்மளால் முடியாதது ஒன்றும் இல்லை முடியும் என நினைத்தால் வெற்றி
அடைய முடியும் என மாணவி சந்தியா தெரிவித்துள்ளார்