ஆரணி தனியார் பள்ளி மாணவி மாவட்ட அளவில் அசத்தல்

Published: 11/05/2024 13:47 PM Updated: 11/05/2024 13:47 PM
Ads
news-banner

தமிழ்நாடு முழுவதும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் மொத்த தேர்ச்சி விகிதம் 91.55% மாணவிகள் - 94.53% மாணவர்கள் - 88.58% மாணவர்களை விட மாணவிகள் 5.95% அதிகம் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்

 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் பெஸ்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. மேலும் இப்பள்ளியில் 1500 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

 

நேற்று வெளியான 10ம் வகுப்பு தேர்வு முடிவில் 10ம் வகுப்பு மாணவி பிரியங்கா மாவட்ட அளவில் 496/500 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

 

இதனையடுத்து பள்ளி தாளாளர் ஏ.எச்.இப்ராஹிம் தலைமையில் மாணவிக்கு சால்வை அணிவித்து கேக் வெட்டி பட்டாசு வெடித்தும் கொண்டாடினார்கள்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாணவி பிரியங்கா,  பள்ளி நிர்வாகம் முதல்வர் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் தான் தன்னால் முதல் மதிப்பெண் எடுக்க முடிந்தது என்றும் எதிர் காலத்தில் மாவட்ட ஆட்சியராக பதவி ஏற்று பொதுமக்களுக்கு சேவை செய்வது தனது லட்சியம் என்று கூறினார்.

 

பள்ளி அளவில் 2வது இடத்தை 487 மதிப்பெண் பெற்று காவியா என்ற மாணவியும் 3வது இடம் 485 மதிப்பெண் பெற்று அசோக்குமார் என்ற மாணவனும் பெற்றனர்.

 

100/100 மதிப்பெண்களை ஆங்கிலத்தில் 3பேரும் கணிதத்தில் 2 பேரும் அறிவியல் மற்றும் சமூக அறிவியலில் தலா 1 நபர்களும் பெற்றுள்ளனர்

 

இந்நிகழ்வில் பள்ளி செயலாளர் அகமது பாஷா இயக்குநர்கள் ரியாஷ் அகமது ஷாஷியா பர்வீன் பள்ளியின் முதல்வர் நிர்மல் குமார் துணை முதல்வர் நிஷா பள்ளி ஆலோசகர் சைதை முருகன் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.