செய்யாறில் அதிமுக சார்பில்
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமியின் பிறந்தநாள் விழா நேற்று
நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள அருள்மிகு பாலகுஜாம்பிகை
உடனுறை வேதபுரீஸ்வரர் கோயிலில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான
எடப்பாடி கே.பழனிச்சாமியின் 70வது பிறந்தநாள் விழா முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்
மற்றும் கோயில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு
அழைப்பாளர்களாக வருகை தந்த திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி மோகன்,
முன்னாள் அமைச்சர் முக்கூர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு கோயிலில் உள்ள
விநாயகருக்கு எடப்பாடியார் பெயரில் அர்ச்சனை மற்றும் சிறப்பு வழிபாடு செய்தனர்.
பின்னர் கோவில் வளாகத்தில் தென்னை
மரம், மாமரம், புங்கன் மரம் உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளை நட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக
நிர்வாகிகள் நகர செயலாளர் வெங்கடேசன், நகர அவை தலைவர் ஜனார்த்தனம், ஒன்றிய
செயலாளர்கள் மகேந்திரன், அரங்கநாதன், துரை மாவட்ட இணை செயலாளர் விமலா மகேந்திரன்,
மாவட்ட மகளிரணி துணை செயலாளர் சுபாஷினி, மாவட்ட நிர்வாகிகள் அருணகிரி, ரவிச்சந்திரன்,
கோபால், வழக்கறிஞர் மெய்யப்பன், கந்தசாமி, தசரதன், பாராசூர் பெருமாள், அருண்,
அரவிந்த், நரசிம்மன், கோவிந்தராஜ், அருளானந்தம், செபாஸ்டின்துரை, சேகர், பிரகாஷ்,
சுதாகர், இளையராஜா, தணிகாச்சலம், எழில், சுரேஷ், வெங்கடேஷ், சுரேஷ், வெற்றிச்செல்வன்,
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.