கலசபாக்கம் அடுத்த
தென்மகாதேவமங்கலத்தில் உள்ள பருவதமலை உச்சியில் ரூ 4.80 லட்சத்தில் புதிய
இடிதாங்கி பொருத்தப்பட உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம்
அடுத்த தென்மகாதேவமங்கலத்தில் அமைந்துள்ள 4560 அடி உயரம் கொண்ட பருவதமலை உச்சியில்
ஸ்ரீ மல்லிகார்ஜுனேஸ்வரர் சமேத பிரம்மாம்பிகை தாயார் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு
பல்வேறு மாவட்டங்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பௌர்ணமி அன்று
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள் பிற நாட்களிலும் ஆயிரக்கணக்கான
பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் கோடை காலத்தில் மழை
உச்சிக்கு செல்லும் பக்தர்களின் சிலர் இடி மின்னல் தாக்கி இறந்து விடுகிறார்கள்
எனவே பக்தர்களின் நலன் கருதி 10 ஆண்டுக்கு முன்பு பருவதமலை உச்சியில் இரண்டு
இடிதாங்கிகள் பொருத்தப்பட்டது. இருப்பினும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பலத்த இடி
மின்னலுடன் கூடிய மழை பெய்தது அதன் காரணமாக கோபுரத்தில் உள்ள சிலை சேதமடைந்து கீழே
விழப்பட்டது இதனால் இடிதாங்கிகள் பொழுதாகி இருக்கலாம் என இந்து சமய அறநிலைத்துறை
அதிகாரிகள் இடிதாங்கி பொருத்தும் பணியாற்றலை வரவழைத்து ஆய்வு செய்தனர். அப்பொழுது
ஒரு இடிதாங்கி பழுதாகியுள்ளது என்பது தெரியவந்தது
இதனை எடுத்து இந்து செமையா
அறநிலையத்துறை மூலம் ரூபாய் 4.80 லட்சம் மதிப்பீட்டில் கோயம்புத்தூரில் இருந்து
புதிதாக இடிதாங்கி வரவைக்கப்பட்டு மலை உச்சிக்கு எடுத்துச் செல்லும் பணி நேற்று
முன்தினம் முதல் தொடங்கியது. இடிதாங்கி பொருட்கள் அனைத்தும் மலை உச்சிக்கு
எடுத்துச் சென்று பொருத்தும் பணி கூடிய விரைவில் முடியும் என இந்து சமய
அறநிலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.