முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி அவர்களின் 55-ஆவது நினைவு தினம்

Published: 18/05/2024 15:04 PM Updated: 18/05/2024 15:04 PM
Ads
news-banner

தமிழ்நாடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான  ஏ.கோவிந்தசாமி அவர்களின் 55-ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

 

விழுப்புரம் முத்துவேல் லே-அவுட் பகுதியில் உள்ள அவரது இல்லத்தின் எதிரில்  அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அவர்களின் திருவுருவப்படத்திற்கு மறைந்த கோவிந்தசாமி அவர்களின் மகனும், பாஜக மாநில துணை தலைவர்/முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஏ.ஜி.சம்பத் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். உடன் மாநிலத் துணைத் தலைவர் தங்க வரதராஜ், ஓபிசி அணி மாநில தலைவர் சாய் சுரேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் தாமரை மணிகண்டன், நகர தலைவர் வடிவேல்பழனி 28 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர், ஒன்றிய தலைவர்கள் தென்னரசு வெங்கடகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.