அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 25 சதவீதம் முன்னுரிமை படிவத்தை எம்பி அண்ணாதுரை வழங்கினார்

Published: 18/05/2024 15:08 PM Updated: 18/05/2024 15:08 PM
Ads
news-banner

அருணை மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முன்னுரிமை 25 சதவீதம் தள்ளுபடி 3-வருடம் மட்டும் செல்லுபடியாகும் இந்த மருத்துவ அட்டையின் கீழ் தொழிலாளர்கள் தங்கள் மற்றும் தங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் படிவத்தை தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். அருணை மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் எ.வ.கம்பன் வழிகாட்டுதலின்படி அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட அமைப்பாளர் ஏ.ஏ.ஆறுமுகம் தலைமையில் மாவட்ட  துணை அமைப்பாளர்கள் மெட்ராஸ் கே.சுப்பிரமணி, ஏ.டபுள்யு.ஷாஜகான், எடப்பாளையம் சி.ரவி, பு.பாலசுந்தர், இரா.அர்சுணன் கி.ஜெயபிரகாஷ் ஆர்.கே.முத்துகுமார் இரா.அன்பரசு ஆகியோர் முன்னிலையில் துணிகடை துணி மடிப்பு நிர்வாகி பரணி எம்.ஏழுமலை அனைவரையும் வரவேற்று பேசினார்.

அருணை மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முன்னுரிமை 25 சதவீதம் தள்ளுபடி 3-வருடம் மட்டும் செல்லுபடியாகும் இந்த மருத்துவ அட்டையின்கீழ் துணிகடை துணி மடிப்பு தொழிலாளர்களுக்கு எம்.பி. அண்ணாதுரை படிவம் வழங்கினார்.
மேலும் அமைப்புசாரா ஓட்டுநர் அணி ஆட்டோ, வேன், கார், லாரி, பஸ், ஓட்டுநர் தொழிலாளர்களுக்கும் அனைத்து அமைப்புசாரா தொமுச சிறுகடை மற்றும் நடைபாதை வியாபாரிகள் கட்டிட தொழிலாளர்கள் எலெக்ட்ரிஷியன் முடி திருத்துவோர், சலவை தொழிலாளர் தையல் கலைஞர்கள் இருசக்கர வாகனம் பழுதுபார்ப்பவர்கள் உள்ளிட்ட 158 உட்பிரிவு தொழிலாளர்களுக்கு அருணை மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சலுகைகளுக்கான படிவங்களை எம்.பி. அண்ணாதுரை வழங்கினார்.
இறுதியில் துணிகடை துணி மடிப்பு நிர்வாகி எம்.அமீர்ஜான் நன்றியுரையாற்றினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளர் இரா.ராஜசேகர், வட்ட பிரதிநிதி ச.அலிமுகமது க.காதர்ஷா எஸ்.சான்பாஷா அமைப்புசாரா துணிகடை துணி மடிப்பு தொழிலாளர்கள் எஸ்.ஜெயராமன், எம்.சிவக்குமார் எம்.தேவேந்திரன், பி.முகமது இப்ராஹிம் எம்.ரவிச்சந்திரன், டி.விநாயகமூர்த்தி டி.சீனுவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.