நாகப்படினம் - இலங்கை கப்பல் போக்குவரத்து தேதி
குறிப்பிடாமல் மீண்டும் ஒத்திவைப்பு, பயணிகள், வியாபாரிகள் மிகுந்த அதிருப்தியடைந்தனர்.
சென்ற வருடம் அக்டோபர் மாதம் இயங்கிக் கொண்டிருந்த
பயணியர் போக்குவரத்து கப்பல் கொஞ்ச நாட்களில் நிறுத்தப்பட்டது. பின்னர் ஆறு
மாதங்களுக்கு பிறகு மே 13 ஆந்தேதி சிவகங்கை என்ற பெயரில் கப்பல் போக்குவரத்து
தொடங்கும் என்ற அறிவிக்கப்பட்டது. பின்னர் ஏதோ நிர்வாக காரணங்கள்
சொல்லப்பட்டு மே 17 ஆந்தேதி போக்குரத்து தொடங்கும்
என அறிவிக்கப்பட்டது. பிறகு 17 ஆந்தேதி 19 ஆந்தேதியாக மாறியது. பயண டிக்கெட்டை கேன்சல் செய்து
கொள்ளலாம், அல்லது தேதி மாற்றம் செய்து கொள்ளலாம் என்று சொல்லப்பட்டது.
ஆனால் இப்போது மே 19 ஆந்தேதி நாகையிலிருந்து
இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து தொடங்கும் என்று பயணிகளும்
வியாபாரிகளும், பொதுமக்களும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் புதிய
கப்பலுக்கு சர்வதேச போக்குவரத்துக்கான அரசின் அனுமதி கிடைப்பதில் தாமதம்
ஏற்படுவதால் போக்குவரத்து தொடங்குவது தாமதமாகிறது என்று கப்பல் போக்குவரத்து தேதி
குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக தனியார் நிறவனம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால் ஆவலாக இருந்த பயணிகளும்
வியாபாரிகளும் பொது மக்களும் மிகுந்த அதிருப்தி அடைந்துள்ளனர்.