திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசூர் பாரதி நகரில்
தரைப்பாலம் அமைக்க கோரி அனைத்து கட்சி மற்றும் அரசூர் பொதுமக்கள் விழுப்புரம்
மாவட்ட ஆட்சியர் பழனி அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறிருப்பதாவது, விழுப்புரம்
மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசூர் சென்னை - திருச்சி தேசிய
நெடுஞ்சாலையில் பாரதி நகர் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள்
வசித்து வருகின்றனர். இந்நிலையில் அரசூரில் மேம்பாலம் கட்டுமான பணிகள் தொடங்கி
நடைபெற்று வரும் நிலையில், பாரதி நகரில் இருந்து காந்தலவாடி கிராமத்திற்கு
செல்லும் பிரதான சாலை உள்ளது. அரசூர் மற்றும் பாரதி நகர் பொதுமக்கள் பள்ளி,
கல்லூரி, மாணவர்கள், வெளியூர் செல்வதற்கும், விவசாயிகள் விவசாய நிலத்திற்கு
செல்வதற்கும் தேசிய நெடுஞ்சாலை கடந்து செல்ல வேண்டும். ஆகையால் பாரதி நகரில்
தரைப்பாலம் அமைத்து தர விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி விரைந்து நடவடிக்கை
எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர். இதில் அனைத்து கட்சி
நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும்
பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.