வேட்டவலம் அருகே கள்ளச்சாராய காய்ச்சிய நபர் கைது

Published: 18/05/2024 15:12 PM Updated: 18/05/2024 15:12 PM
Ads
news-banner

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன், அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சு.ரமேஷ்ராஜ் அவர்கள் மேற்பார்வையில், திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கபிரிவு காவல் ஆய்வாளர் ஜி.ஜனார்த்தனன் தலைமையில், காவல் உதவி ஆய்வாளர் விநாயகமூர்த்தி மற்றும் காவலர்கள் இணைந்து வேட்டவலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் வேட்டவலம் கோட்டப்பாறை பகுதியில் உள்ள முட்புதர் அருகே கள்ளச்சாரய காய்ச்சுதலில் ஈடுபட்டிருந்த திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் வட்டம், பிடாரன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த சத்தியராஜ் வ/34 த/பெ ஜெயராமன் என்பவரை மடக்கிபிடித்து கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது

மேலும் அவரிடமிருந்து சுமார் 140 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் சுமார் 1,400 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கைப்பற்றப்பட்டு கீழே கொட்டி அழிக்கப்பட்டது.