விழுப்புரம் மாவட்டம் மயிலம்
வட்டாரம் கூட்டேரிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்
காந்தியின் 33-வது நினைவு தினத்தை முன்னிட்டு, மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ரமேஷ்
தலைமையில் ராஜிவ்காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் வருகை புரிந்த
அனைவரையும் வட்டார தலைவர் மெடிக்கல் செல்வம் வரவேற்றார் மாநில பொதுக்குழு
உறுப்பினர் இலகண்ணன் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் பாரத ரத்னா
ராஜீவ் காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி, பயங்கரவாத எதிர்ப்பு உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. அதனைத்
தொடர்ந்து அமைதி ஊர்வலமும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் சிறப்பு அழைப்பாளர்களாக வழக்கறிஞர் விஜயன் எஸ்.சி துறை மாவட்ட
தலைவர் ராமமூர்த்தி ஒலக்கூர் வட்டார தலைவர் புவனேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இதில் வட்டார துணைத் தலைவர்கள் சீத்தாபதி, பாபு, வட்டாரப் பொருளாளர்
பலராமன், மாவட்டத் துணைத் தலைவர் இருதயராஜ் மாவட்ட செயலாளர்கள் அர்ஜுனன், தாமோதரன்,
ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன், ஐடி விங் மாவட்ட தலைவர்
கோபாலகிருஷ்ணன், மனித உரிமை துறை மாவட்ட தலைவர் சக்திவேல், மாவட்ட செயற்குழு
உறுப்பினர் முத்து நாராயணன், ஐ.டி.விங் மாவட்ட பொது செயலாளர் மதன், மனித உரிமை
துறை வட்டார தலைவர் முனுசாமி, ஐடி.விங் மாவட்ட செயலாளர்கள் கார்த்திகேயன், ராஜ்குமார்,
கிராம கமிட்டி நிர்வாகிகள் கருணாநிதி, லட்சுமணன், முருகன் மற்றும் மகிளா காங்கிரசை
சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.