கலசப்பாக்கம் அடுத்த மோட்டூர் நட்சத்திர
கோவிலில் முருகப்பெருமான் பிறந்த ஜென்ம நட்சத்திரமான விசாக நட்சத்திர தினமான
நேற்று தமிழ்நாடு முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பிரார்த்தனைகள்
நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த
மோட்டூர் நட்சத்திர கோவிலில் அமைந்துள்ளது மிகவும் பழமை வாய்ந்த சுயம்பு ஸ்ரீ.
சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இத்திருக்கோவில் நேற்று
அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர்
முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் விமர்சையாக நடைபெற்றது.
தொடர்ந்து திருக்கோவிலில் உற்சவருக்கு பல்வேறு
வகையான வண்ண மலர்களைக் கொண்டு மாலைகள் தொடுத்து, உற்சவர்
முருகப்பெருமான் கோவில் வளாகத்தில் வலம் வந்து, வண்ண மலர்களால் அலங்கரித்து
வைக்கப்பட்டிருந்த மரத் தொட்டிலில் குழந்தை வடிவிலான பால முருகப்பெருமானை
தொட்டிலில் வைத்து (பிறந்த குழந்தை போல்) மலர் மாலைகள், பழ மாலைகள் கொண்டு
அலங்கரித்து பின்னர் பஞ்ச கற்பூர ஆரத்தி காண்பித்தனர். ஸ்ரீ சுயம்பு
சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் விசாக நட்சத்திர தினமான நேற்று குழந்தை
வடிவில் தொட்டிலில் அமர்ந்து பாலமுருகர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இந்த நிகழ்வில் திருவண்ணாமலை, கலசபாக்கம்,
பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை
தந்து முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம்
செய்தனர்.
படவிளக்கம்
கலசபாக்கம் அடுத்த மோட்டூர் நட்சத்திர கோவிலில்
அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ சுயம்பு சிவசுப்பிரமணிய சுவாமி
திருக்கோவிலில் குழந்தை வடிவில் பக்தர்களுக்கு காட்சியளித்த பாலமுருகர்.