திருவண்ணாமலையில் வாக்கு எண்ணும் பணிக்கான வழிமுறைகள் குறித்து
தேர்தல் அலுவலர் தெ.பாஸ்கர பாண்டியன், தலைமையில் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பாராளுமன்ற
பொதுத் தேர்தல் 2024 நிறைவுற்றதையடுத்து வருகிற 04.06.2024 அன்று மேற்படி தேர்தலில்
பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள திருவண்ணாமலை மற்றும் ஆரணி ஆகிய இரண்டு பாராளுமன்ற தொகுதிகளின்
வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணிபுரியும் பொருட்டு வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள்
குரூப்-பி நிலையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள் குரூப்-சி நிலையிலும்
மற்றும் இவர்களுடன் வாக்குகள் எண்ணும் பணியினை மேற்கொள்ள நுண் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்,
மேற்படி நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வருகிற
04.06.2024 அன்று வாக்கு எண்ணிக்கை மேற்கொள்ள தேதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு
சட்டமன்ற தொகுதிக்கும் தலா 14 வாக்கு எண்ணும் மேசைகள் அமைக்கப்படவுள்ளன. மேலும், ஒவ்வொரு
மேசைக்கும் ஒரு மேற்பார்வையாளர் ஒரு உதவியாளர் ஒரு நுணி பார்வையாளர் என 3 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், வாக்கு எண்ணுகை பணியாளர்கள்
அனைவரும் 04.06.2024 அன்று காலை 5 மணிக்குள் வாக்கு எண்ணும் மையத்திற்கு வர வேண்டும்.
காலை 5 மணிக்கு பிறகு சீரற்றமயமாக்கல் மூலம் ஒவ்வொரு பணியாளருக்கும் மேசை ஒதுக்கீடு
செய்யப்படும். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக வாக்கு எண்ணிக்கை இரகசியம் மீற
மாட்டேன் என்பது குறித்து உறுதிமொழி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பாக எடுத்துக்கொள்ள
வேண்டும். காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை
தொடங்கும் மேலும், வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்போன் மற்றும் ஐ-பேட் உள்ளிட்ட
இந்த மின்னணு சாதனங்கள் கொண்டுவர தடை செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் நடைமுறைகள்
குறித்து அனைத்து அலுவலர்களுக்கும் விரிவாக பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
மேலும், உரிய வழிமுறைகள் பின்பற்றி
வாக்கு எண்ணிக்கை பணியினை சிறப்பான முறையில் நடத்திட வேண்டுமாய் மாவட்ட தேர்தல் அலுவலர்
மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், கேட்டுக்கொண்டார்.
இப்பயிற்சிக் கூட்டத்தில் ஆரணி
நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவார் மு.பிரியதர்ஷினி,
மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) கோ.குமான் மற்றும் நியமிக்கப்பட்டுள்ள
அனைத்து வாக்கு எண்ணிக்கை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.