தி.மலையில் நிலத்தரகர்கள் நலச்சங்க சார்பில் போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published: 26/07/2026 07:36 AM Updated: 26/07/2026 07:36 AM
Ads
news-banner

திருவண்ணாமலை அறிவொளிபூங்கா எதிரில் (பழைய பேருந்து நிலையம் அருகில்) அகில இந்திய தலைவர் விருகை வி.எம்.கண்ணன் வழிகாட்டுதலின்பேரில் இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேன்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் நலச்சங்கம் கட்டுமான அமைப்புசாரா திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் சார்பில் போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட தலைவர் டி.வி.எம்.எஸ் சீனுவாச சுந்தரம் தலைமையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் வழக்கறிஞர் பிரிவு மாநில அமைப்பாளர் ஏ.மணிகண்டன் முன்னிலை வகிக்க, மாவட்ட செயலாளர் வி.எம்.பாபு அனைவரையும் வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் டி.வி.எம்.எஸ் சீனுவாச சுந்தரம் தலைமையில் நிர்வாகிகள் போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை பொதுமக்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள், கிரிவல பக்தர்கள், வாகன ஓட்டி உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வழங்கினர். மேலும் உங்கள் பாதுகாப்பு - எங்கள் கடமை என்றும் போதையை பழகாதீர், குடும்பத்தையும் உயிரையும் இழக்காதீர், போதையில்லா தமிழகம் உருவாக்குவோம் எனவும் விழிப்புணர்வு நிகழ்வில் நிர்வாகிகள் பொதுமக்களுடன் இணைந்து உறுதிமொழியேற்றனர்.

இதில் தொகுதி தலைவர் எல்ஐசி இரா.சக்திவேல், தொகுதி செயலாளர் முகமது ஜலீல், தொகுதி பொருளாளர் சாதிக்பாஷா, தொகுதி இணை செயலாளர்கள் எஸ்.மலர்கொடி, அமீது பாஷா செங்கம் தொகுதி தலைவர் எல்ஐசி பி.கோவிந்தராஜ் உள்பட சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் பி.சங்கர்கணேஷ் நன்றி கூறினார்.