மூளைச் சாவடைந்தவரின் கைகளை எடுத்து அறுவைசிகிச்சை மூலம் 2 பேருக்கு பொருத்தி தனியார் மருத்துவமணை சாதனை

Published: 24/05/2024 14:46 PM Updated: 24/05/2024 14:46 PM
Ads
news-banner

மூளைச் சாவடைந்த இருவரின் கைகளை எடுத்து அறுவைசிகிச்சை மூலம் 2 பேருக்கு பொருத்தி தனியார் மருத்துவமணை சாதனை படைத்துள்ளது.

 

சென்னை அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமணையில் விபத்தில் தனது இரு கைகளை இழந்த இருவருக்கு மூளைச் சாவடைந்த நன்கொடையாளரின் கைககளை பொருத்தி மறுவாழ்வு அளித்துள்ளது.

 

ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் கார்த்திக் (31) என்பவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறுதி சடங்கில் கலந்துக்கொண்ட போது அங்கு பட்டாசு வெடித்ததில் தனது இரு கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டு இருக்கைகளும் சிதைந்து போனது.

 

அதேபோல் ஆட்டோ ஓட்டுனர் மகன் புவன் (22) என்பவருக்கு இயந்திரத்தில் ஒரு கை சிக்கி ஒரு கை செயலிழந்தது.

 

இந்நிலையில் தனியார் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வந்த இருவருக்கு சாலை விபத்தில் மூளைச் சாவடைந்த பெண் நன்கொடையாளர்களின் இரண்டு கைகளும் பொருத்தப்பட்டது.

 

கார்த்திக் என்பவருக்கு இரு கைகளும் பொருத்தப்பட்டு அவருக்கு திருமணமாகி தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகிறார்.

 

புவன் என்ற இளைஞருக்கு ஒரு கையும் பொருத்தப்பட்டு இருவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்,

 

பொருத்தப்பட்ட மூன்று கைகளும் பெண் நன்கொடையாளர்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இது குறித்து அறுவை சிகிச்சை மேற்க்கொண்ட மருத்துவர் செல்வா சீத்தாராமன் கூறுகையில் : இந்த இரண்டு அறுவை சிகிச்சைகளும் எங்களுக்கு பெரிய சவாலாக இருந்தது.

 

 கார்த்திக் என்பவருக்கு இரண்டு கைகளை பொருத்த சுமார் 20-மணி நேரத்திற்க்கு மேலாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

 

விபத்தில் மூளைச் சாவடைந்த நன்கொடையாளர்களின்  கைகள் திருச்சியில் இருந்து விமானம் மூலம் கொண்டுவரப்பட்டு அறுவை சிகிச்சை சரியான நேரத்தில் செய்து முடிக்கப்பட்டது.

 

இந்த அறுவை சிகிச்சையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள், எலும்பியல் நிபுணர்கள், மயக்கவியல் நிபுணர்கள், சிறுநீரக மருத்துவர்கள், மற்றும் தீவிர சிகிச்சை நிபுணர்கள் உட்பட 18-பேர் கொண்ட மருத்துவ குழு உதவியுடன் வெற்றிகரமாக செய்யப்பட்டது என தெறிவித்தார்.