பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளை
வளர்க்க தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சிக்கு பாராட்டுகள் குவிகின்றனர். தெருக்கூத்து, பெரியமேளம், பம்பை, கிராமிய பாடல்கள்
சேர்க்கை நடைபெறுகிறது.
பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளை
வளர்க்க தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. தெருக்கூத்து,
ஜமா, பம்பை, கிராமிய பாடல்கள் கற்றுக்கொள்ள ஆர்வமுடன் இசை பள்ளியை நாடி கற்றுவருகின்றனர்.
தென் மாவட்டங்களில் வில்லுப்பாட்டு,
கிராமிய பாட்டு, கரகாட்டம் பிரபலமாக உள்ள நிலையில் மத்திய மண்டல மாவட்டங்களில் கரகாட்டமும்
சாமி ஆட்டமும் பிரபலமடைந்துள்ளது. வட தமிழகத்தில் தெருக்கூத்தும் வள்ளிக்கும்மியும்
பிரபலமாக உள்ள நிலையில் பல்வேறு இடத்திற்கு இடம் பாரம்பரியமான நாட்டுப்புற கலைகள் மாறுபட்டு
காணப்படுகிறது.
தமிழ் மாதங்களில் அம்மனுக்கு உகந்த
மாதமான ஆடி மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் தெருக்கூத்து நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் கரகாட்டம், பம்பை, உடுக்கை ஆட்டம், நாடகம் உள்ளிட்டவைகளும் நடைபெறும்.
ஆனால் தற்பொழுது உள்ள டிஜிட்டல்
காலத்தில் மெல்ல மெல்ல பாரம்பரிய கலைகள் அழிந்து மக்கள், பெண்கள் முகம் சுளிக்கும்
வகையில் பல்வேறு வகையான ஆபாச நடனங்கள் தற்பொழுது உலா வந்து கொண்டிருக்கிறது.
மக்களின் வாழ்வியலோடு இணைந்த இந்த
தெருக்கூத்து, கிராமிய பாடல், பம்பை, பெரிய மேளம் என்று அழைக்க கூடிய ஜமா இவற்றை மீண்டும்
உயிர்ப்பிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மற்றும் கலை பண்பாட்டுத்துறை இணைந்து தமிழ்நாட்டில்
திருவண்ணாமலை,விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில்
உள்ள இசைப் பள்ளிகளிலும், 5 இசைக்கல்லூரிகளிலும், 3 இசை மையங்களிலும் கிராமிய கலைகளை
கற்றுத் தர முடிவெடுத்தது.
காலமாற்றத்தினால் டிஜிட்டல் உலகத்தை
நோக்கி இளைஞர்களும் பொதுமக்களும் படையெடுத்து வரும் நிலையில் செல்போனில் உலகமே கையடக்கத்தில்
இருந்தாலும் மெல்ல மெல்ல அழிந்து வரும் இந்த நாட்டுப்புற கலையை அனைத்து தரப்பு மக்களும்
இளைஞர்களும் மீண்டும் புத்துணர்ச்சி அளிக்க தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ள இந்த
முயற்சி பெரும் பாராட்டை பெற்றுள்ள நிலையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது என்றே
கூறலாம்.
நாட்டுப்புற கலைகள் மெல்ல மெல்ல
அழிந்து வருவதற்கு ஒரு காரணமாக குறைந்த ஊதியம் இருந்தும் வருகிறது. அதனை கருத்தில்
கொண்ட தமிழக அரசு பகுதி நேர ஆசிரியர்களாக கலைஞர்களை நியமித்து அனைவரும் அனைத்து கலைகளையும்
கற்கலாம் என்பதை வடிவமைத்துள்ளது.
குறிப்பாக தென்மாவட்டங்களில் தெருக்கூத்து,
கோல்கால், வள்ளி கும்மி, புரவி ஆட்டம் உள்ளிட்ட கலைகளுக்கு பயிற்சி மையம் சார்பில்
கற்றுக்கொடுத்து ஒரு நிலையில், டெல்டா மாவட்டங்களில்
புலியாட்டம் கரகாட்டம் சாமியாட்டம் தப்பாட்டம் கற்றுத்தர பயிற்சி வகுப்புகள் நடைபெற்று
வருகின்றது.
இந்த நிலையில் வட மாவட்டத்தில்
தற்பொழுது தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ள தெருக்கூத்து, பம்பை, பெரிய மேளம் என்கின்ற
ஜமா மற்றும் கிராமிய பாடல்களுக்கு திருவண்ணாமலையில் பெரிய வரவேற்பு உள்ளது என்று கூறலாம்.
திருவண்ணாமலை செங்கம் சாலையில்
வைரக்குன்று மலை அருகே மாவட்ட அரசு இசைப்பள்ளி அமைந்துள்ளது. அரசு இசைப்பள்ளியில் தமிழ்நாடு
அரசு அழிந்து வரும் நாட்டுப்புற கலை உள்ளிட்ட சில கலை வகைகளை பாதுகாக்கும் வகையில்
கடந்தாண்டு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்புக்கிணங்க கலை பண்பாட்டுத்
துறை சார்பில் பகுதி நேர நாட்டுப்புற கலை பயிற்சி மையம் துவங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் தொடங்கப்பட்டுள்ள
பகுதிநேர நாட்டுப்புற கலை பயிற்சி மையத்தில் தெருக்கூத்து, பம்பை, பெரிய மேளம், கிராமிய
பாட்டு என நான்கு வகையான பயிற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சிகளில் 17 வயது
முதல் அனைத்து வயதினரும் சேரலாம் அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. ஒவ்வொரு வாரமும் வெள்ளி
மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை 2 மணி நேரம் வகுப்புகள் நடைபெறும்.
இதற்காக கலை பண்பாட்டு துறை தெருக்கூத்துக்கு
பம்பை கிராமிய பாட்டு என தனித்தனியாக நேர்காணல் நடத்தி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு
கடந்த ஜூலை மாதம் வகுப்புகள் தொடங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த பகுதி நேர நாட்டுப்புற கலை
பயிற்சி மையத்தில் இதுவரை சுமார் 120க்கும் மேற்பட்டோர் ஆண்கள் பெண்கள் என சேர்ந்து
இதில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்
முதல் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் வரை இந்த பயிற்சியில் சேர்ந்துள்ளனர். ஓராண்டு பயிற்சி
முடிவில் பல்கலைக்கழகங்களால் தேர்வு நடத்தப்பட்டு தனி சான்றிதழ் வழங்கப்படும். திருவண்ணாமலை
பகுதி நேர நாட்டுப்புற கலை பயிற்சி மையத்தில் பெரிய மேளம் மற்றும் தெருக்கூத்துகளில்
அதிக அளவிலான மாணவர்கள் ஆர்வமுடன் பயிற்சி பெற்று வருகின்றனர். வாரம்தோறும் இரண்டு மணி நேரம் வகுப்புகள் அவர்களுக்கு
பயிற்சிக்கு போதுமானதாக இல்லை எனவே தமிழக அரசு அழிந்து வரும் தெருக்கூத்து போன்ற பல்வேறு
கலைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் அந்த கலைகளை பாதுகாக்கும் வகையாக
இது போன்ற பகுதி நேர பயிற்சி வகுப்புகளை நடத்துவது அனைவரிடத்தில் மகிழ்ச்சி ஏற்படுத்துவதாகவும்,
இதனை சமூக ஆர்வலர்கள் மற்றும்
கலை ஆர்வலர்கள் வரவேற்பதாகவும் வாரம் தோறும் இரண்டு நாட்கள் இரண்டு மணி நேரம் பயிற்சி
என்பதை கூடுதலாக வாரத்திற்கு 4 நாட்கள் 8 மணி நேர பயிற்சி என்று உயர்த்த வேண்டும் என்றும்
கேட்டுக் கொண்ட அவர்கள் முன்னோர்களால் பாரம்பரியமாக பாதுகாத்து வளர்த்து வந்த நாட்டுப்புறக்
கலைகள் மெல்ல மெல்ல அழிந்து வருவதை அறிந்து தமிழ்நாடு அரசு அதனை உயிர்பிக்கும் வகையில்
இது பன்ற
வகுப்புகளை தந்திருப்பது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி
அளிப்பதாகவும் தமிழ்நாடு அரசுக்கு நன்றிகளையும் தெரிவித்தனர்.