ரூபாய் 1.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றி திறப்பு விழா: எம் எல் ஏ ஓ.ஜோதி பங்கேற்பு

Published: 24/09/2024 17:06 PM Updated: 24/09/2024 17:06 PM
Ads
news-banner

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஒன்றியம், செய்யாறு அடுத்த சிறு வஞ்சிப்பட்டு கிராமத்தில் தமிழ்நாடு அரசு மின்சார துறை சார்பில் ரூபாய் 1.80 லட்சம் மதிப்பீட்டில் 100 கிலோ வாட் திறன் கொண்ட புதிய மின்மாற்றியிணை எம் எல் .ஜோதி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.


மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஒன்றிய குழு தலைவர் ராஜி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் தினகரன் வரவேற்றார்.


ஒன்றிய குழு உறுப்பினர் குணாநிதி, திமுக நிர்வாகிகள் கோபு, செந்தில்குமார், சேட்டு, கார்த்திகேயன், ரமேஷ், ஏழுமலை, வெங்கடேசன், சோமசுந்தரம், பிரகாஷ், ராமு, ரமேஷ், ராஜேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.