திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதிக்குப்பட்ட
புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் நேற்று முன்தினம் ரூ 9.68 கோடி
மதிப்பீட்டில் புதிய 4 சாலைகளை சி.என்.அண்ணாதுரை எம்பி
பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன், தலைமை
தாங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கி.ஆறுமுகம்,
வட்டார
வளர்ச்சி அலுவலர் சம்பத், வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா,
ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர்
மனோகரன் அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நாடாளுமன்ற
உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை புதிய 4 சாலைகளை பூமி பூஜை செய்து
தொடங்கி வைத்து பேசியதாவது, நானும் சட்டமன்ற உறுப்பினரும்
வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய வந்த போது இப்பகுதியில் சாலைகள்
குண்டும் குழியுமாக உள்ளது என்பதை அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் புதிய சாலை அமைக்க வேண்டி முதலமைச்சர்
மு.க.ஸ்டாலினிடமும் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை
அமைச்சர் எ.வ.வேலுவிடமும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர
பாண்டியனிடமும் கூறி புதிய சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து
வழங்கப்பட்டுள்ளது. அதில் அரிதாரிமங்கலம் தாமரைப்பாக்கம் முதல்
கீழ்தாமரப்பாக்கம் சாலையை ரூ 282.93 லட்சத்தில் 5.550 கிலோமீட்டர்
தூரம் வரை புதிய சாலையும், ஜப்திகரியந்தல் முதல் சி நிம்மியந்தல்
சாலையை ரூ 297.49 லட்சத்தில் 5.145 கிலோமீட்டர் தூரம் வரை புதிய
சாலையும், புதுப்பாளையம் பாவாடை தோப்பு முதல்
கன்னிவீட்டுகொட்டாய் சாலையை ரூ 228.94 லட்சத்தில் 3.545
கிலோமீட்டர் தூரம் வரை பார்சல் நந்திமங்கலம் முதல் கொட்டைகரை
சாலையை ரூ 158.43 லட்சத்தில் 3. 147 கிலோமீட்டர் தூரம் வரை புதிய
நான்கு சாலைகளை இப்போது தொடங்கி வைத்துள்ளோம். இதன்
பணிகள் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு நல்ல ஒரு தரமான
சாலையாக அமைக்கப்படும் அதன் பிறகு மக்கள் சுலபமான முறையில்
செல்லலாம் இத்தனை சாலைகளும் பி.எம்.ஜி.எஸ் ஒய் திட்டத்தின் கீழ்
நிதி ஒதுக்கீட்டில் சாலைகள் அமைக்கப்படுகிறது இந்த சாலை மூலம்
மக்கள் சுலபமான முறையில் செல்வதற்கு அமைக்கப்படுகிறது என்று
நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை இவ்வாறு கூறினார்.
.