உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக விரைவில் பதவி ஏற்பார் அமைச்சர் பொன்முடி தொண்டர்கள் மத்தியில் பேச்சு

Published: 24/09/2024 17:20 PM Updated: 24/09/2024 17:20 PM
Ads
news-banner

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் திமுக மேற்கு ஒன்றியம் வளையாம்பட்டு, மேலமங்கலம், செம்மார், ஏனாதிமங்கலம், ஏமப்பூர் ஆகிய பகுதியில் கட்சியின் பவள விழாவை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது


நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் பொன்.கௌதம சிகாமணி ஆகியோர் கலந்து கொண்டு திமுக கொடியேற்றி சிறப்புரையாற்றினர்.


அப்போது பேசிய அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் திமுக அரசு மக்களுக்கான நல்ல பல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும், தற்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக விரைவில் பதவி ஏற்பார் என தொண்டர்கள் மத்தியில் பேசினார்.


அப்போது ஏராளமான தொண்டர்கள் கைதட்டி உற்சாக வரவேற்பு தந்தனர். இதில் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


திருவெண்ணெய்நல்லூர் திமுக மேற்கு ஒன்றியம் வளையாம்பட்டு, மேலமங்கலம், செம்மார், ஏனாதிமங்கலம், ஏமப்பூர் ஆகிய பகுதியில் கட்சியின் பவள விழாவை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் .பொன்முடி கலந்துகொண்டு திமுக கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.