திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த லாடவாரம் கிராமத்தில் பசுமை நாயகர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு சித்தா மற்றும் ஆயுர்வேதா இலவச மருத்துவ முகாம் பாட்டாளி மக்கள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் இல.பாண்டியன் தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், தங்கராஜ், வீரமணி, சங்கர், தமிழரசன், ஊராட்சி மன்ற தலைவர் குமரவேல் முன்னிலையில் திரௌபதியம்மயம்மன் ஆலயம் அருகே நடைபெற்றது.
மேலும் இந்த இலவச மருத்துவ முகாமில் ஆயுர்வேதா பொது மருத்துவர்கள் வானதிதேவி, வசுந்திரா, சுமையா ஆகியோர்கள் பங்கேற்று முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து இலவச சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்து மாத்திரைகளை வழங்கினார்கள்.
மேலும் இந்த முகாமில் மாவட்ட நிர்வாகிகள் சம்பத், செல்வராஜ், தினகரன், பன்னீர் வசந்தகுமார், கிளை நிர்வாகிகள் குமரன், அஜித், தமிழ்வாணன், சூர்யா, ஹரிஷ், ஹரிகிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயராமன், தேவதாஸ் உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.