அதன்படி மணல் மூட்டைகள், நீர்
இரைப்பான் எந்திரங்கள் ஆகியவற்றை நெடுஞ்சாலை துறை மூலம் தயார்
நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள
மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத்து துறை
அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த
கூட்டத்தில் வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில் அனைத்து துறை
அலுவலர்களும் கடந்த காலங்களில் வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட
அனுபவங்களை பாடமாக எடுத்துக்கொண்டு பேரிடர் பணிகளை
மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில்
முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தீவிரப்படுத்த மாவட்ட மாவட்ட
ஆட்சியர் த.பிரபுசங்கர் உத்தரவிட்டார் இதனையடுத்து நெடுஞ்சாலைத்
துறை சார்பாக மாநில மற்றும் மாவட்ட இதர சாலைகள் மழை
வெள்ளத்தால் துண்டிக்கப்படாமலும், சேதமடையாமலும் இருக்கும்
வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலை துறை திருவள்ளூர் கோட்ட
பொறியாளர் டி.சிற்றரசு மேற்பார்வையில் உதவி கோட்ட பொறியாளர்
எஸ்.ஜெ.தஷ்ணவிஸ் பெர்னான்டோ தலைமையில், உதவி
பொறியாளர்கள் பிரவீன், பிரசாந்த் மற்றும் சாலை ஆய்வாளர்கள், சாலை
பணியாளர்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து திருவள்ளூர் பகுதியில் உள்ள
மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட இதர சாலைகளில் மழைக்கால
பாதிப்புகளை தடுக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக திருவள்ளூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர்
அலுவலகத்தில் ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில்
வைக்கப்பட்டுள்ளன. மேலும் 300 சவுக்கு மரங்கள், நீர் இறைப்பான்
எந்திரங்கள், 2 பொக்லைன்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட
பொருட்கள் தயார் நிலையில் உள்ளன.
மேலும் சாலை துண்டிப்பு, சாலையில் மரம் விழுந்தால் உடனடியாக சரி
செய்ய ஏதுவாக நெடுஞ்சாலைத் துறை சாலை ஆய்வாளர்கள், சாலை
பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டுமென
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து சாலைகள் பாதிக்கப்பட்டால் உடனடியாக அதனை
சீரமைப்பதற்கான அனைத்து வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும்
திருவள்ளூர் கோட்ட நெடுஞ்சாலை துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு
இருப்பதாக உதவி கோட்ட பொறியாளர் எஸ்.ஜெ.தஷ்ணவிஸ்
பெர்னான்டோ தெரிவித்தார்.