திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் வடகிழக்கு பருவமழை
தொடர்ந்து மழை பெய்து வருவதால் மின்சாதன பொருட்களை
கையாளும் வழிமுறைகளை செயற் பொறியாளர் ரவி வெளியிட்டுள்ளார்.
இதில் கூறியதாவது :
1. ஈரம் கசிந்த ஸ்விட்ச் போர்டுகளை தொடக்கூடாது.
2. மின்கம்பம் மற்றும் ஸ்டே கம்பிகளில் வளர்ப்பு பிராணிகளை
கட்டக்கூடாது.
3. இடி மற்றும் மின்னல் வரும் சமயங்களில் வீட்டில் உள்ள மின்சாதன
பொருட்களை அனைத்து வைக்க வேண்டும்.
4. வீட்டின் அருகில் பழுதான மின்கம்பம் மற்றும் தாய்வான முறையில்
மின் கம்பிகள் சென்றால் உடனடியாக மின்வாரிய அலுவலகத்திற்கு
தெரிவிக்கவும்.
5. வீட்டின் அருகில் மரக்கிளைகள் மின் கம்பிகளில் மீது உரசினால்
மின்வாரிய அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் மாற்றாக
மின்னோட்டம் இருக்கும் சமயத்தில் தனிப்பட்ட நபர் மரக்கிளைகளை
அகற்றக்கூடாது.
6. வீட்டில் மின்தடை ஏற்பட்டால் 9498794987 என்ற மின்னக புகார்
எண்களை தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்கலாம்.
உள்ளிட்ட விழிப்புணர்வு வழிமுறைகளை வெளியிப்பட்டன.
இதில் உதவி இயக்குனர் பத்மநாபன் மற்றும் மின்வாரிய அலுவலர்கள்
கலந்து கொண்டனர்.