சென்னையில் வடகிழக்கு பருவமழையால் சேதமடைந்த சாலைகள்

Published: 16/10/2024 15:39 PM Updated: 16/10/2024 15:39 PM
Ads
news-banner
பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை
அமைச்சர், சென்னை இராஜீவ்காந்தி சாலை, பல்லாவரம், துரைபாக்கம்
சாலை, பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வழியாக செல்லும் சாலை,
சென்னை உள்வட்ட சாலை விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் வடகிழக்கு
பருவமழையால் சேதமடைந்த சாலைகள் மற்றும் மழைநீர் வடிகால்களை
ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின்படி, நேற்று பொதுப்பணிகள்,
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர்
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தததை தொடர்ந்து
கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் சேதமடைந்த சாலைகளை
பார்வையிட்டார்.
நெடுஞ்சாலைத் துறை மூலம் சென்னை பெருநகர மாநகராட்சியில் 270
கி.மீ. சாலைகள், 347 சிறிய மற்றும் பெரிய பாலங்கள். 237 கி.மீ. மழைநீர்
வடிகால் அமைப்புகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
பொதுப்பணிகள். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை
அமைச்சர், சென்னை இராஜீவ்காந்தி சாலை, குறிப்பாக மத்திய கைலாஷ்.
எஸ்ஆர்பி டூல்ஸ் சந்திப்பு. காரப்பாக்கம், துரைப்பாக்கம் மற்றும் ஒக்கியம்
மடுவு பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்கள் மற்றும் தேங்கியுள்ள
மழைநீரை வெளியேற்றும் நீர்இறைப்பு பணிகளை பார்வையிட்டார்.
ஒக்கியம் மடுவு பகுதியில் ஏற்கனவே உள்ள 100 மீட்டர் நீளமுள்ள
பாலத்தினை. 200 மீட்டர் நீளமுள்ள LITTOULDITAS அமைக்கும்
பணியினை பார்வையிட்டார். இந்த பாலப் பணியானது சென்னை
மெட்ரோ இரயில் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், பல்லாவரம், துரைபாக்கம் சாலை மற்றும் பள்ளிக்கரணை சதுப்பு
நிலம் வழியாக செல்லும் சாலையில் உள்ள 16 சிறு பாலங்கள் தூர்வாரும்
பணியினை பார்வையிட்டார். தில்லை கங்கா நகர் வாகன
சுரங்கபாதையில் நீர்இறைக்கும் பணிக்கான 300 எச்பி திறன் கொண்ட

மோட்டார் மற்றும் 300 கி.வா. திறன் உள்ள ஜெனரேட்டர் மற்றும் அதன்
இயங்கும் திறன் ஆகியவற்றை பார்வையிட்டு, 24X7 முழுநேரமும்
கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தினார்.
சென்னை உள்ளவட்ட சாலை விருகம்பாக்கம் நல்லா கால்வாயினை
பார்வையிட்டார். இப்பகுதியில் மழைக்காலங்களில் ஓடும் நீர்
சாலைமட்டத்தைவிட உயர்ந்து செல்வதால், போக்குவரத்துக்கு
இடையூறாக உள்ளது. இதனை தவிர்க்க தக்க ஆய்வு மேற்கொண்டு
நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
சென்னை, ஈ.வெ.ரா. சாலையில் சென்னை மாநகர காவல் அலுவலகம்.
ஆண்ட்ரூ சர்ச் பகுதிகளில் மழைநீர் தேங்கா வண்ணம் கட்டி
முடிக்கப்பட்ட இணைப்பு கால்வாயும். அதனை தொடர்ந்து இரயில்வே
இருப்பு பாதையை கடந்து பக்கிங்காம் கால்வாய் சேரும் வகையில்
அமைக்கப்பட்ட பாலத்தினை பார்வையிட்டார்.
வால்டாக்ஸ் சாலையில் சமீபத்தில் அமைக்கப்பட்ட மழைநீர்
வடிகால்களை பார்வையிட்டார்.
நெடுஞ்சாலைத் துறை அனைத்து அலுவலர்களும் வடகிழக்கு
பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையிலும்.
கண்காணிப்புடன் இருக்க தக்க அறிவுரை வழங்கினார்.