தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதெல்லாம் கூட்டுறவு துறை வளர்ச்சி பெறுகிறது

Published: 16/11/2024 15:19 PM Updated: 16/11/2024 15:19 PM
Ads
news-banner

தி.மு.. ஆட்சிக்கு வரும் போதெல்லாம் கூட்டுறவு துறை வளர்ச்சி பெறுகிறது என தி.மலையில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் ..வேலு சிறப்புரையாற்றினார்.


திருவண்ணாமலை மாவட்டம் கூட்டுறவுத்துறை சார்பில் 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நேற்று திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.


விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாநில தடகளச் சங்க துணைத் தலைவர் டாக்டர் ..வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்..க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், எஸ்.அம்பேர்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் எஸ்.பார்த்திபன் வரவேற்றார். திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மேலாண்மை இயக்குனர் சிவக்குமார் உறுதிமொழி வாசித்தார்.


திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் கா.ஜெயம் திட்ட விளக்கவுரையாற்றினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் ..வேலு கலந்து கொண்டு ரூ.2 கோடியே 40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்தார்.


மேலும் ரூ.13 கோடியே 67 லட்சம் மதிப்பில் 1885 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும், ரூ.45 லட்சத்து 83 ஆயிரம் மதிப்பில் புதியதாக வாங்கப்பட்டு உள்ள வேளாண் எந்திரங்களை கூட்டுறவு நிறுவனத்திற்கும் வழங்கி பேசினார்.