தோமையார் மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை!!

Published: 16/11/2024 15:29 PM Updated: 16/11/2024 15:29 PM
Ads
news-banner
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு போளூர் சாலையில் உள்ள
புனித தோமையார் மருத்துவமனை மற்றும் தோல் நோய் நிலையத்தில்
எலும்பு முறிவு மற்றும் மூட்டு அறுவை சிகிச்சைவாரத்தின் 7நாட்களும் 24
மணி நேரமும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள
ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் இலவச எலும்பு
சிகிச்சை முகாம் நடைபெற்றது.முகாமை புனித தோமையார்
மருத்துவமனை மற்றும் தொழுநோய் நிலைய நிர்வாக செயல் அலுவலர்
மற்றும் டாக்டர் மரிய ஆஷாப் நர்சிங் கல்லூரி தாளாளர்அருட் சகோதரி
எ.மரிய ரத்தினம் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். எலும்பு
முறிவு மற்றும் மூட்டு மாற்று நிபுணர் டாக்டர் அருண்குமார்
எம்.எஸ்.ஆர்த்தோ மற்றும் மருத்துவர்கள் குழுவினர் முகாமில் காலை
முதல் பங்கேற்று சிகிச்சைக்கு வந்த 500 மேற்பட்டவர்களுக்கு மாலை
வரை இலவசமாக  மூட்டு வலி, இடுப்பு வலி, தோள்பட்டை வலி, கழுத்து
வலி, குதிகால் வலி,ஆகியவை கண்டறியப்பட்டு அவர்களுக்கு எக்ஸ்ரே,
ரத்தப் பரிசோதனை, எலும்பு புறை கண்டறியும் பரிசோதனை, நரம்பு
தளர்ச்சி கண்டறியும் பரிசோதனை என பல்வேறு சிகிச்சை அளித்து
ஆலோசனை வழங்கி இலவச மருந்துகள் வழங்கப்பட்டன
மேலும் சிகிச்சைக்கு வந்தவர்களுக்கு எலும்பு சிகிச்சை அளித்தனர்.