ஆரணி அருகே
அதிமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
முள்ளன்டிரம் பகுதியில் சிப்காட்
தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி
நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜி.வி.கஜேந்திரன் கடந்த திங்கட்கிழமை ஆரணி
வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்பிரமணியனிடம்
வேட்பு மனுவை வழங்கினார்.
இதனையடுத்து ஆரணி ஒன்றியம்
வேதாஜிபுரம், முள்ளண்டிரம் பூசிமலைக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு
சேகரிப்பில் ஈடுபட்டார். கட்சியினர் பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தனர். பெண்கள் நீண்ட வரிசையில் நின்று
ஆரத்தி எடுத்து மலர் மாலை தூவி உற்சாக வரவேற்பளித்தனர்.
மேலும் ஆரணி நாடாளுமன்ற தொகுதி
தேர்தலில் வெற்றி பெற்று முள்ளண்டிரம் பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டை
அமைப்பதற்கு மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதில் ஆரணி தொகுதி பொறுப்பாளர்கள்
முக்கூர் சுப்பிரமணியன் சேவூர் ராமச்சந்திரன் பன்னீர்செல்வம் மாவட்ட செயலாளர்கள்
தூசி மோகன் ஜெயசுதா மாவட்ட அவைத் தலைவர் கோவிந்தராஜன் மாவட்ட ஜெயலலிதா பேரவை
செயலாளர் பாரிபாபு மாவட்ட இணை செயலாளர் வனிதா சதிஷ் ஒன்றிய செயலாளர் சங்கர்
திருமால் மாவட்ட பொருளாளர் வேலு நகர மன்ற உறுப்பினர்கள் சுதா குமார் பானுப்ரியா
பாரதிராஜா மற்றும் நகர ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் தேமுதிக நிர்வாகிகள் கலந்து
கொண்டனர்..