பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில் திமுகவில் இணைந்த அமமுகவினர்

Published: 20/04/2026 15:27 PM Updated: 20/04/2026 15:27 PM
Ads
news-banner

திருவண்ணாமலை மாநகரத்தை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட அமமுகவினர் அக்கட்சிகளிலிருந்து விலகி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

திருவண்ணாமலை, திருக்கோயிலூர் ரோடு, சாரோனில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில், திருவண்ணாமலை மாநகரம், அமமுகவைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை மாநகரம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட செயலாளர் ஏ.சிலம்பரசன் தலைமையில், டி.பரணி, எஸ்.தினேஷ், எஸ்.நந்தக்குமார், கே.அபிஷேக், எம்.கார்த்தி, ஏ.முகமத், எம்.அனிப், ஏ.தமிழரசன், எம்.அசோக்குமார், கே.நித்யா, ஆர்.முகமது ஈசா, ஏ.அரவிந்தன் உட்பட 25க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

திமுகவில் இணைந்த அனைவருக்கும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கைத்தறி ஆடை அணிவித்து வரவேற்றார். கழகத்தில் இணையும் நிகழ்ச்சியினை வட்ட செயலாளர் எஸ்.கே.டி.வீரா செய்திருந்தார்.

நிகழ்ச்சியில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், மாநகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் ப்ரியா விஜயரங்கன், மாநில அமைப்புசாரா தொமுச ஏ.ஏ.ஆறுமுகம், மாவட்ட அமைப்பாளர்கள் பாலமுரளிகிருஷ்ணா, இரா.கார்த்திகேயன் வட்ட செயலாளர் எஸ்.கே.டி.வீரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.