தேர்தல் பறக்கும் படை அதிகாரி மீது வியாபாரிகள் குற்றச்சாட்டு

Published: 02/04/2024 10:44 AM Updated: 02/04/2024 10:44 AM
Ads
news-banner

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தேர்தல் பறக்கும்படை அதிகாரி மீது வியாபாரிகள்  சரமாரியாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி புரியும்   வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர் இவர் பரங்கிமலை ஒன்றியத்தில் பணி புரிந்த காலத்தில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சில பொய்யான சாட்சியங்களின் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். 

 

அதன் பிறகு உயர் அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட தொகையை கொடுத்து மீண்டும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்திற்கு பணி மாறுதல் பெற்று வந்தார். தற்போது பாராளுமன்ற தேர்தல் பறக்கும் படையில் மாவட்ட தேர்தல் அதிகாரியால் பணி வழங்கப்பட்டது. இவர் சோதனை செய்வதில் பல்வேறு குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக ஆளும் கட்சி மற்றும் தெரிந்த நபர்களின் வாகனங்களை சோதனை செய்வதில்லை. மாறாக ஏழை, எளிய சிறு, குறு வியாபாரிகளை சோதனை செய்து அவர்களிடம் சிறிய அளவிலான தொகையை பறிமுதல் செய்து வருகிறார் என கூறப்படுகிறது.

 

இதனைத் தொடர்ந்து சோத்துப்பாக்கம் வியபாரி சங்க தலைவரை சோதனை செய்து பிரச்சினைக்கு உள்ளாக்கி காவல் நிலையத்தில் புகார் செய்து அதன் பிறகு அவரிடம் மன்னிப்பு கேட்டு அங்கிருந்து நைசாக நழுவி சென்றுள்ளார். மேலும் இது குறித்து மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர் மீது மாவட்ட ஆட்சியர் 

பாரபட்சம் இன்றி உரிய நடவடிக்கை எடுத்து தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும் என பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.