கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு விலைவாசியை கட்டுப்படுத்த தவறிவிட்டது

Published: 02/04/2024 11:21 AM Updated: 02/04/2024 11:21 AM
Ads
news-banner

திருவண்ணாமலை நாடாளுமன்ற திமுக வேட்பாளர் சி என் அண்ணாதுரை ஆதரித்து திருப்பத்தூரில் தேர்தல் பரப்புரையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை பேசினார்.

 

திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பத்தூர் மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி சார்பில் திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் மைதானத்தில் இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் சி.என.அண்ணாதுரை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்ல பெருந்தகை வாக்கு சேகரித்தார்.

 

அப்போது பேசிய செல்வ பெருந்தகை, கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு விலைவாசியை கட்டுப்படுத்த தவறிவிட்டது. இந்திய பண மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக வரும் எனக் கூறினார். 

 

ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் ஆட்சிக்கு வந்த பிறகு அவரவர் வங்கி கணக்கிற்கு ரூ.15 லட்சம் வரும் என கூறினார். உண்மைக்கு புறம்பான பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி வருகின்றார் மோடி.

 

அரசு அமைப்புச் சட்டத்தை பாதுகாக்க நினைக்கின்ற ஒரு நாடு எந்த விதத்திலும் உச்சநீதி மன்றத்தில் திட்டு வாங்காது.  உச்ச நீதிமன்றம் பலமுறை எச்சரித்துள்ளது.  எதையும் மோடி அரசு காதில் வாங்குவதில்லை. உச்சநீதிமன்றமா பாஜக அரசை கண்டித்து? ஐநா சபையும் இரண்டு நாட்களுக்கு முன் கண்டித்திருக்கிறது.

 

தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தவுடன், முதலமைச்சர்களை கைது செய்து அமலாக்க துறையை ஏவி விடுகிறீர்கள், வருமான வரி துறை, சிபிஐ துறையை பயன்படுத்தி சோதனைக்கு அனுப்புகிறீர்கள்.

இதெல்லாம் கண்டிக்கத்தக்கது. 

 

அது மட்டுமல்ல 139 ஆண்டுகள் பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் பணத்தை திருடுகின்றனர்.  135 கோடி எங்கள் கணக்கில் இருந்த வருமான வரி ஒப்புதல் இல்லாமல் எடுத்திருக்கிறது. இந்த தேர்தல் இந்திய தேசத்தையும், அரசியல் அமைப்பு சட்டத்தையும் பாதுகாக்கின்ற தேர்தல் ஆகும் என பேசினார்.

 

இந்நிகழ்வில் திருப்பத்தூர் சட்டமன்ற திமுக உறுப்பினர் நல்லதம்பி, காங்கிரஸ் மாவட்ட தலைவர் பிரபு நகர தலைவர் பரத் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.