திமுக தலைவர் ஸ்டாலின் திருவண்ணாமலை தேரடி வீதியில் நடைபயிற்சி...உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்...

Published: 04/04/2024 10:31 AM Updated: 04/04/2024 10:31 AM
Ads
news-banner

இந்தியா கூட்டணியின் திருவண்ணாமலை மற்றும் ஆரணி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு க ஸ்டாலின் நேற்று காலை திருவண்ணாமலை அடுத்த சோ. காட்டுக்குளம் கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலூர் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு திருவண்ணாமலைக்கு வந்த தமிழ்நாடு முதல்வருக்கு திமுக திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து நேற்று காலை திருவண்ணாமலை நேரடி வீதியில் நடை பயிற்சி மேற்கொள்ள வந்த திமுக தலைவர் ஸ்டாலின், கடலைகடை  சந்திப்பில் உள்ள காய்கறி மார்க்கெட்டில் கடை வைத்திருக்கும் காய்கறி சிவனடியார் வியாபாரிகளிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார். தொடர்ந்து தேரடி வீதியில் நடைபயிற்சி மேற்கொண்ட அவருக்கு ஜோதி பூ மார்க்கெட் வியாபாரிகள் ஆளுயர ரோஜா மாலை வழங்கினர்.

தொடர்ந்து அதே வீதியில் நடைபயிற்சி மேற்கொண்ட அவர் ராஜகோபுரம் அருகே கற்பூரம் தேங்காய் பூ கடை வைத்துள்ள வியாபாரிகளிடம் சென்று நலம் விசாரித்து உதய சூரியனுக்கு வாக்கு சேகரித்தார். அதனைத் தொடர்ந்து சாலையின் இரு புறங்களிலும் இருந்த பொதுமக்களிடம் கை அசைத்தவாறு உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்த பொழுது பள்ளிக்குச் சென்ற மாணவ மாணவிகள் தானாக முன்வந்து அவருடன் நின்று குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

 

 

தொடர்ந்து அவர் மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே அமைந்துள்ள இஞ்சி டீ கடையில் அமர்ந்து தேனீர் பருகினார் தொடர்ந்து அவரிடம் கல்லூரி மாணவிகள் பொதுமக்கள் என பலதரப்பட்டவர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு மேலாக நடை பயிற்சி மேற்கொண்டார். இந்த நடைபயிற்சியின்போது பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், நகர மன்ற தலைவர் நிர்மலாவேல்மாறன், நகர செயலாளர் கார்த்திக்வேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் ப்ரியாவிஜயரங்கன், அரசு ஒப்பந்ததாரர் அருணை துரை வெங்கட், நகர்மன்ற உறுப்பினர்கள் அருணாரவி, மெட்ராஸ் கே.சுப்பிரமணி, சுற்றுச்சுழுல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் அரவிந்தன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.