புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலைக்கு கடத்தப்பட்ட 2832 மது பாட்டில்கள்

Published: 04/04/2024 10:54 AM Updated: 04/04/2024 10:54 AM
Ads
news-banner

புதுவையில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு தோஸ்த் மினி வாகனம் மூலம் மது பாட்டில்கள் கடத்திச் செல்வதாக விழுப்புரம் மதுவிலக்கு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் ஆய்வாளர் மீனா தலைமையிலான போலீசார் தென்னமாதேவி சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் மேற்கொண்டனர், அப்பொழுது தோஸ்த் வாகனத்தில் வைக்கோல்போர் உள்ளே மது பாடல்களை வாகனத்தில் மறைத்து வைத்து கடத்திச் சென்றது தெரிய வந்தது வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் 59 பெட்டிகளில் சுமார் 2,832 மது பாட்டில்கள் திருவண்ணாமலைக்கு கடத்தி சென்றது தெரிய வந்தது. இதனை அடுத்து வாகனத்தை ஓட்டி வந்த சிவக்குமார் என்பவரை கைது செய்த விழுப்புரம் மதுவிலக்கு போலீசார் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், வாகனம் மற்றும் வாகனத்தில் கொண்டு வந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூபாய் 5 லட்சம் ஆகும்.