திருவண்ணாமலை மாவட்டம்
கலசப்பாக்கம் பஜார் வீதியில் உள்ள பயணியர் நிழற்குடை அருகாமையில் நேற்று முன்தினம்
திமுக தேர்தல் அலுவலகத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பெ.சு.தி.சரவணன், எம்எல்ஏ தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாநில
மருத்துவர் அணி துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர்
க.சுப்பிரமணியம், ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், ஆகியோர் முன்னிலை
வகித்தனர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அ.சிவகுமார், அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு
அழைப்பாளராக கலந்து கொண்ட பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திமுக தேர்தல்
அலுவலகத்தை திறந்து வைத்து பேசியதாவது, தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளில்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி மற்றும் ஆரணி
நாடாளுமன்ற தொகுதி ஆகிய இரண்டு தொகுதியும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் அபார
வெற்றி பெற வேண்டும் அதுவும் குறிப்பாக கலசபாக்கம் தொகுதியில் அதிகளவு வாக்கு
வித்தியாசத்தில் நமது நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, வெற்றி பெற
வேண்டும் அதற்காக நாம் அனைவரும் ஒத்துமையாக உதயசூரியன் சின்னத்தில் வாக்கு
சேகரித்து வெற்றி பெற வைக்க வேண்டும் ஏனென்றால் நமது இந்திய கூட்டணியான திமுக
கூட்டணி அபார வெற்றி பெற்று டெல்லியில் இந்திய கூட்டணி ராகுல் காந்தி தலைமையில்
நாம் ஆட்சி அமைக்க வேண்டும் மோடி அரசை விரட்டியடிக்க வேண்டும் அதனால் நம் அனைவரும்
உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து தமிழகத்தில் உள்ள 40 தொகுதியும் அபார
வெற்றி பெற வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இவ்வாறு கூறினார்.
நிகழ்ச்சியில் அருணை வெங்கட்,
விசிக மாவட்ட செயலாளர் வளர்மதி, ஒன்றிய குழு துணை தலைவர் பாலசுப்ரமணியம், மாவட்ட கவுன்சிலர்
பட்டம்மாள் முனுசாமி, ஒன்றிய துணைச் செயலாளர் குப்பன், ஜெயப்பிரகாஷ், மஞ்சுளா,
மாவட்ட பிரதிநிதிகள் சின்னதுரை, முருகையன், ஒன்றிய பொருளாளர் நாவலன், ஒன்றிய அவைத்
தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட விளையாட்டு
மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி துணை
அமைப்பாளர் அன்பரசு, மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் கோடீஸ்வரன், மாவட்ட
தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் நவீன்குமார், ஒன்றிய கவுன்சிலர்கள்
செண்பகவல்லி, பிச்சாண்டி, முனியாண்டி, மஞ்சுளா சுதாகர், தணிகைமலை, கூட்டமைப்பு
தலைவர் வித்யா பிரசன்னா, நகர செயலாளர் சௌந்தர்ராஜன், மற்றும் ஒன்றிய நிர்வாகிகள்
கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.